அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் சிறுமியிடம் அத்துமீறிய நபர் - ஆவேசமடைந்து தாக்கிய தாய்..!


அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் சிறுமியிடம் அத்துமீறிய நபர் - ஆவேசமடைந்து தாக்கிய தாய்..!
x

இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டாலும் தி.மு.க.-அ.தி.மு.க. இடையேதான் நேரடி போட்டி நிலவி வருகிறது.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இடைத்தேர்தலையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. தி.மு.க., காங்கிரஸ், கூட்டணி கட்சியினர் மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர், நாம் தமிழர், தே.மு.தி.க.வினரும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் அறிமுக பிரச்சார கூட்டம் வேப்பம்பாளையத்தில் நடைபெற்றது. இதில்எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். கூட்டத்தில் சிறுமியிடம், ஒரு நபர் அத்துமீறியதாக கூறி, சிறுமியின் தாயார் ஆவேசமடைந்து அவரை தாக்க முயன்றதோடு, கடுமையாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த அதிமுகவினர் அவரை சமாதானப்படுத்திய நிலையில், அந்த தாய், சிறுமியை அழைத்து கொண்டு கூட்டத்தை விட்டு வெளியேறி சென்றார்.

ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில், சிறுமியிடம் ஒருவர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story