மது வாங்கி தருவதில் தகராறு..! போட்டோ கிராபருக்கு சரமாரி கத்திக்குத்து - 5 பேர் கைது


மது வாங்கி தருவதில் தகராறு..! போட்டோ கிராபருக்கு சரமாரி கத்திக்குத்து - 5 பேர் கைது
x

காஞ்சிபுரம் அருகே போட்டோ கிராபரை சரமாரியாக கத்தியால் குத்திய 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் விக்கி (26). இவர் வீட்டிலேயே ஸ்டுடியோ வைத்து போட்டோகிராபராக வேலை செய்து வருகிறார்.

இவர் டெம்பிள் சிட்டி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பகுதியில் மதுபானம் அருந்தி கொண்டிருந்த 5 நபர்கள் விக்கியை மடக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த 5 பேரும் சேர்ந்து விக்கியை சரமாரியாக கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார், படுகாயம் அடைந்த விக்கியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு விக்கிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுப்பப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்த சரவணன் (20), எல்லப்பன் (20), கன்னியப்பன் என்கிற தனுஷ் (19), ஓரிக்கையை சேர்ந்த தனுஷ் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்கி, எல்லப்பனை அழைத்து மது மற்றம் சைட்டீஸ் வாங்கி வர சொல்லி உள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில், எல்லப்பன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து மதுபோதையில் விக்கியை தாக்கியது தெரிந்தது.

இந்நிலையில் போட்டோகிராபரை, கத்தியால் தாக்கிய 5 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் சிறுவன் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.

ஐந்து பேர் கத்தியால் தாக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உண்டாக்கி உள்ளது.


Next Story