3 மணி நேரம் நடந்தது புழல் சிறையில் போலீசார் அதிரடி சோதனை - கைதிகளிடம் எதுவும் சிக்கவில்லை


3 மணி நேரம் நடந்தது புழல் சிறையில் போலீசார் அதிரடி சோதனை - கைதிகளிடம் எதுவும் சிக்கவில்லை
x

புழல் சிறையில் போலீசார் 3 மணிநேரம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் இதில் கைதிகளிடம் இருந்து எதுவும் சிக்கவில்லை.

சென்னை

சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளும், தண்டனை சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகளும், பெண்கள் சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சமீப காலமாக சிறையில் உள்ள கைதிகள் செல்போன், கஞ்சா பயன்படுத்துவது அதிகரித்து வந்தது. இதையடுத்து கைதிகள் செல்போனில் பேசுவதையும், கஞ்சா பயன்படுத்துவதை தடுக்கவும் கொளத்தூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையிலும் புழல் சிறை டி.ஐ.ஜி. முருகேசன், சூப்பிரண்டுகள் நிகிலா, நாகேந்திரன், கிருஷ்ணராஜ் மற்றும் புழல் போலீஸ் உதவி கமிஷனர் ஆதிமூலம் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை 3 சிறைகளிலும் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை 9 மணி வரை நீடித்தது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் சிறை கைதிகளிடம் இருந்து கஞ்சா, செல்போன் ஏதும் கைப்பற்றப்படவில்லை.

புழல் சிறையில் நடைபெற்ற போலீசாரின் இந்த அதிரடி சோதனையால் கைதிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.


Next Story