கத்தியை காட்டி வழிப்பறி...போக்குக்காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்


கத்தியை காட்டி வழிப்பறி...போக்குக்காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்
x

சென்னை எம்.கே.பி.நகர் பகுதியில், 2 வழக்குகளில் தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த இருதயராஜ் என்பவர், முல்லை நகர் சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது, மது போதையில் இருந்த இளைஞர் ஒருவர், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்றார்.

இதுதொடர்பான புகாரின் பேரில், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, ஏற்கனவே ஒரு வழக்கில் தேடப்பட்டு வந்த சூனாம்பேடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்கிற ராக்கி என்பது தெரியவந்தது.


Next Story