விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னமராவதி தாசில்தார் அலுவலகத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். ஒன்றியத்தலைவர் சுப.தங்கமணி போராட்டத்தினை தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் ஏனாதி ராசு, மாவட்ட பொருளர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாநிலக்குழு உறுப்பினர் நடராஜன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். போராட்டத்தில் பொன்னமராவதி ஒன்றியம் முழுவதும் வீட்டுமனை இல்லாத குடும்பங்களுக்கு வீட்டுமனை இடம் வழங்கவும், நீண்ட ஆண்டுகளாக பட்டா கேட்டு காத்திருக்கும் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தாசில்தாரிடம் வழங்கினர். இதில் சி.பி.ஐ. ஒன்றிய துணை செயலாளர் கருணாமூர்த்தி, விவசாய கொழிலாளர் சங்க ஒன்றியத்தலைவர் வெள்ளைச்சாமி மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.