வினாக்கள் எளிமையாக இருந்தது: தேர்வர்கள் கருத்து


வினாக்கள் எளிமையாக இருந்தது: தேர்வர்கள் கருத்து
x

குரூப்-4 தேர்வு எளிமையாக இருந்ததாக தேனி மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் கருத்து தெரிவித்தனர்

தேனி

குரூப்-4 தேர்வு குறித்து மாவட்டத்தில் தேர்வு எழுதிய சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது;-

கல்பனா (உப்புக்கோட்டை) :- நான் குரூப்-2 தேர்வு 4 முறையும், குரூப்-4 தேர்வு 2 முறையும் எழுதி உள்ளேன். இந்த முறை பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள், தமிழ் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாகவும், பொது அறிவு தொடர்பான கேள்விகள் கொஞ்சம் கடினமாகவும் இருந்தன.

ராஜேஷ் (தேனி) :- வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் சூழலில் இதுபோன்ற போட்டித்தேர்வுகள் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆர்வமுடன் தேர்வை எழுதினேன். தமிழ் பாடம் தொடர்பான கேள்விகள் எளிமையாக இருந்தன. கணிதம் தொடர்பான கேள்விகள் கொஞ்சம் கடினமாக இருந்தன.

பவித்ரா (கம்பம்) :- தேர்வுக்கு விண்ணப்பித்த நாளில் இருந்து கிடைக்கும் நேரத்தில் தேர்வுக்கு படித்து வந்தேன். தேர்வை நல்ல முறையில் எழுதி உள்ளேன். கணிதம் தொடர்பான கேள்விகள் கொஞ்சம் கடினமாக இருந்தன. மற்ற கேள்விகள் எளிமையாக இருந்தன.

சின்னத்தம்பி (உப்புக்கோட்டை) :- நான் 2-வது முறையாக அரசு பணிக்கான போட்டித்தேர்வு எழுதியுள்ளேன். இந்த முறை சுமார் 7 ஆயிரம் பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதி உள்ளனர். வினாக்கள் எளிதாக இருந்ததால் நம்பிக்கையோடு தேர்வு எழுதினேன்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story