வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x

நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

கரூர்

சங்க நிர்வாகிகள் கைது

இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ்முனியன் என்பவரின் இடைக்கால பணிநீக்கத்தை உடனடியாக ரத்து செய்திட வலியுறுத்தி நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

இதனை கண்டித்தும், வட்டாட்சியர் மனோஜ் முனியனின் இடைக்கால பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த அலுவலர்கள் நேற்று தமிழகம் முழுவதும் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

அந்தவகையில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். இதில் மத்திய செயற்குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட பொருளாளர் சந்துரு உள்பட பலர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

குளித்தலை

இதே கோரிக்கையை வலியுறுத்தி குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு வருவாய்த்துறை அலுவலர் சங்க கரூர் மாவட்ட தலைவர் வைரபெருமாள் தலைமை தாங்கினார்

குளித்தலை வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் இச்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story