சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி


சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி
x

பொன்னேரி அருகே சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர்

பொன்னேரி அருகேதடபெரும்பாக்கம் ஸ்டாலின் தெருவில் வசித்து வந்தவர் வைதேகி (வயது 60). இவரது மகன் சுரேஷ். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் குழந்தைகள் குளிப்பதற்காக வைதேகி அடுப்பில் சுடுதண்ணீர் காய்த்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென சேலையில் தீப்பிடித்து கொண்டது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அனைத்து வைதேகியை மீட்டு பொன்னேரி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சுரேஷ் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story