டேங்கர் லாரி கவிழ்ந்தது


டேங்கர் லாரி கவிழ்ந்தது
x

அருப்புக்கோட்டை அருகே டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில் டிைரவர் உயிர் தப்பினர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை அருகே டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில் டிைரவர் உயிர் தப்பினர்.

லாரி கவிழ்ந்தது

தூத்துக்குடியிலிருந்து டேங்கர் லாரி ஒன்று மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த காளீஸ்வரன் (வயது 24) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரம் பாலத்தில் லாரி சென்று கொண்டிருக்கும்போது முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பஸ் மீது மோதாமல் இருக்க லாரி டிரைவர் லாரியை திடீரென திருப்பியதில் பாலத்தின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் லாரி மோதி நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்ததால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கிரேன் உதவியுடன் லாரியை பந்தல்குடி போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story