வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
புதுக்கோட்டை
கறம்பக்குடி அருகே உள்ள நரங்கியப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 34). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கறம்பக்குடி தாசில்தாரிடம் நன்னடைத்தைக்கான பிணை பத்திரம் எழுதி கொடுத்திருந்தார். இந்நிலையில் கடந்த 2-ந்தேதி பந்துவக்கோட்டை கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரை குணசேகரன் தாக்கினார். இதில் படுகாயமடைந்த முருகேசன் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக குணசேகரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே பிணை பத்திர நடைமுறையை பின்பற்றாத குணசேகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தாசில்தார் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் குணசேகரனை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story