மரத்தில் மோதி வேன் கவிழ்ந்தது

கறம்பக்குடியில் மரத்தில் மோதி வேன் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த டிரைவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
வேன் டிரைவர்
தஞ்சாவூர் மாவட்டம் ஏனாதி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 35). இவர் பட்டுக்கோட்டையில் வாடகை வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பட்டுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடி அருகே புதுவளசலில் உள்ள மாமனார் வீட்டிற்கு வேனை ஓட்டி சென்றார். கறம்பக்குடி பெரிய அக்னி ஆற்று பாலம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக சென்று சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது.
தீவிர சிகிச்சை
இதுகுறித்த தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேனில் சிக்கி படுகாயமடைந்த டிரைவர் சுதாகரை மீட்டனர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.