கிணற்றுக்கு மூடி போடப்பட்டது


கிணற்றுக்கு மூடி போடப்பட்டது
x

சிவகாசி அருகே கிணற்றுக்கு மூடி போடப்பட்டது

விருதுநகர்

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பஞ்சாயத்து முத்துராமலிங்கபுரம் காலனியில் திறந்தநிலையில் கிணறு இருந்தது. இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளதால் அங்கு வசிக்கும் சிறுவர்கள், சிறுமிகள் கிணற்றின் அருகில் வந்து விளையாடி வந்தனர். இந்த நிலையில் கிணற்றின் தடுப்பு சுவரின் உயரம் குறைவாக இருந்ததால் கிணற்றில் குழந்தைகள் தவறிவிழ வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் அந்த திறந்தவெளி கிணற்றுக்கு மூடி அமைக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்த செய்தி தினத்தந்தியில் வெளியானது. அதன் எதிரொலியாக பள்ளப்பட்டி பஞ்சாயத்து தலைவர் ராஜபாண்டியன் அந்த கிணற்றை பார்வையிட்டு உடனடியாக மூடி அமைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தற்போது கிணற்றில் மூடி அமைக்கப்பட்டுள்ளது. அதனை பஞ்சாயத்து தலைவர் நேரில் ஆய்வு செய்தார். விரைந்து நடவடிக்கை எடுத்த பஞ்சாயத்து தலைவர் ராஜபாண்டியனுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story