செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழக அரசை உலகமே பாராட்டுகிறது - கி.வீரமணி


செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழக அரசை உலகமே பாராட்டுகிறது - கி.வீரமணி
x

செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழக அரசை உலகமே பாராட்டுகிறது என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வெற்றிகரமாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்திய தமிழக அரசை இன்று உலகமே பாராட்டுகிறது. குறுகிய காலத்திலேயே உலகளவிலான இரு போட்டியை ஒரு மாநில அரசு நடத்தி காட்டியிருப்பது, தி.மு.க. அரசின் ஆற்றலையும், செயல்திறனையும் காட்டுகிறது.

அதேபோல உலகளவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெற்றிபெறும் வீரர்களை உருவாக்க பல்வேறு திட்டங்களையும் நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதும் முக்கியமானதாகும்.

வெற்றி பெற்ற வீரர்களும், அடுத்து வெற்றிபெற இருக்கும் வீரர்களுக்கும் வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story