Normal
கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்த காட்டு யானை - அலறிய குடும்பம் - திக்.. திக்.. நிமிடங்கள்..!
நீலகிரி மாவட்டம் பந்தலூரில், கதவை உடைத்து வீட்டுக்குள் யானை புகுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் பந்தலூரில், கதவை உடைத்து வீட்டுக்குள் யானை புகுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. நீர்மட்டம் பகுதியில் வசித்து வரும் கந்தசாமி என்பவரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த காட்டு யானை, கோதுமை, அரிசி ஆகியவற்றை உட்கொண்டதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், துரிதமாக செயல்பட்டு வெளியே வந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தேவாலா வனத்துறையினர், யானையை விரட்டினர். குடியிருப்புக்குள் யானைகள் வராமல் தடுக்க சோலார் மின் வேலி அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story