வேலைக்கு சென்ற பெண் மாயம்


வேலைக்கு சென்ற பெண் மாயம்
x

வேலைக்கு சென்ற பெண் மாயமானார்.

அரியலூர்

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் தில்லையம்மாள். இவரது மகள் இந்துமதி(வயது 23). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 17-ந் தேதி மாலை வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை அக்கம், பக்கத்தில் உள்ள வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து தா.பழூர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெகநாத் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Next Story