பெண்ணை தாக்கியவர் கைது


பெண்ணை தாக்கியவர் கைது
x

ஒரத்தநாடு அருகே பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு:

ஒரத்தநாட்டை அடுத்துள்ள பருத்தியப்பர்கோவில் கிராமத்தைச் சேர்ந்த குமார் மனைவி கல்பனா (வயது39), குமாரின் குடும்பத்தினருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த குருராஜ் (44) என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தகராறின் போது குருராஜ் கல்பனாவை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் காயம் அடைந்த கல்பனா ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.. இதுகுறித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து குருராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story