திருத்தணியில் ரூ.15 கோடியில் ரெயில் நிலையத்தை நவீனமயப்படுத்தும் பணி மும்முரம்


திருத்தணியில் ரூ.15 கோடியில் ரெயில் நிலையத்தை நவீனமயப்படுத்தும் பணி மும்முரம்
x

அம்ரித் பாரத் திட்டத்தில் ரூ.15 கோடியில் திருத்தணி ரெயில் நிலையத்தை நவீனமயப்படுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர்

இந்தியாவில் ரெயில் நிலையங்களை நவீனமயமாக்கும் அம்ரித் பாரத் ரெயில் நிலைய திட்டம் என்னும் புதிய கொள்கையை ரெயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது. இதன்படி ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தும், வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரூ.5 கோடி முதல் ரூ.15 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சென்னை கோட்டத்தில் திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், வேலூர், சென்னை கடற்கரை, செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட ரெயில் நிலையங்களை நவீனமயமாக்கும் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த அம்ரித் பாரத் ரெயில் நிலைய திட்ட பணிகளை கடந்த மாதம் 6-ம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் திருத்தணி ரெயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.15 கோடி ரெயில்வே அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் திருத்தணி ரெயில் நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர், இரு நுழைவு வாயிலில் முருகன் கோவில் கோபுரம் அமைப்பது, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் முழு திருவுவச்சிலை அமைப்பது, மாற்றுத் திறனாளிகளில் வசதிக்காக ரெயில் நடைமேடையில் நகரும் படிக்கெட்டுகள், லிப்டு வசதியுடன் கூடிய நடைமேம்பாலம், அனைத்து பேருந்துகளும் ரெயில்நிலையத்திற்குள் வந்து செல்லும் வசதி, 3 இடங்களில் இருசக்கர வாகன பார்க்கிங் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த திட்டத்தின் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் திருத்தணி ரெயில் நிலையத்தை நவீனமயப்படுத்தும் பணிகள் கடந்த சில தினங்களாக முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். 3 மாதங்களுக்குள் ரெயில் நிலைய வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டு ஜனவரி மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story