காதலியை சந்திக்க பர்தாவுடன் சென்ற இளைஞர்... வார்னிங் கொடுத்து அனுப்பிய போலீசார்

கோப்புப்படம்
கன்னியாகுமரியில் காதலியை சந்தித்து பேச, பெண் போல பர்தா வேடமணிந்து கல்லூரிக்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்லூரியின் அருகே பர்தா அணிந்த நிலையில், சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் சுற்றி வருவதை, கல்லூரி காவலாளிகள் பார்த்துள்ளனர்.
அவரை பிடித்து பர்தாவை விலக்கி பார்த்தபோது, இளைஞர் ஒருவர் பர்தா வேடமணிந்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் இளைஞரிடம் விசாரித்ததில், கேரளாவை சேர்ந்த அந்த வாலிபர் தனது காதலியை நேரில் பார்த்து பேச பர்தா அணிந்து வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வாலிபருக்கு எச்சரிக்கை விடுத்த போலீசார், அவரது பெற்றோருடன் அவரை அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story






