வீடு புகுந்து இளம்பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய வாலிபர்கள்


வீடு புகுந்து இளம்பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய வாலிபர்கள்
x

வீடு புகுந்து இளம்பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய 2 வாலிபர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

சென்னை

சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், தனது கணவருடன் வசித்து வந்தார். வழக்கம்போல் அவருடைய கணவர் அதிகாலையில் எழுந்து கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இளம்பெண் மட்டும் தனியாக இருந்தார்.

இதையறிந்த அதே பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் 2 பேர் வீடு புகுந்து, இளம்பெண்ணை தங்கள் ஆசைக்கு இணங்கும்படியும், மறுத்தால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டினர். இதனால் பயந்துபோன அந்த பெண் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனால் மர்மநபர்கள் இருவரும் தப்பி ஓட முயன்றனர்.

ஆனால் பொதுமக்கள், 2 பேரையும் மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் (26), குள்ள பையன் என்ற கணேசமூர்த்தி (28) என தெரியவந்தது. இருவரும் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருவதும் தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story