தியேட்டர்களில் ஐ.பி.எல். உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை திரையிட அனுமதிக்க வேண்டும் - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை


தியேட்டர்களில் ஐ.பி.எல். உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை திரையிட அனுமதிக்க வேண்டும் - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
x

திரையரங்குகளுக்கு பராமரிப்பு கட்டணம் மற்ற மாநிலங்களில் உள்ளது போல் வசூலிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை,

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்டவர்கள் ஆண்டுக்கு இரண்டு படங்கள் நடிக்க வேண்டும் என வலியிறுத்தப்பட்டது.

மேலும், படங்கள் திரையரங்கில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பின்னர்தான் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல், டிக்கெட் கட்டணத்தில் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி. கட்டணம் இருக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

திரையரங்குகளுக்கு பராமரிப்பு கட்டணம் மற்ற மாநிலங்களில் உள்ளது போல் வசூலிக்க வேண்டும் என்றும், மின்சார கட்டணங்கள், சொத்து வரி ஆகியவற்றை திரையரங்குகளுக்கு குறைத்து வசூலிக்க வேண்டும் ஆவன செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே போல் உலக அழகிப் போட்டி, ஐ.பி.எல். உள்ளிட்ட அனைத்து பொழுது போக்கு அம்சங்களையும் திரையிர அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.Next Story