7½ பவுன் நகை திருட்டு


7½ பவுன் நகை திருட்டு
x

7½ பவுன் நகை திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்

கீழக்கரை,

ஏர்வாடியைச் சேர்ந்தவர் சுல்தான் அலாவுதீன். இவருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் சென்னை சென்று தனது மகள் வீட்டில் தங்கி மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். இவரது மகன் நசீர் அகமது தனது பெற்றோர் வீட்டின் அருகில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். நாள்தோறும் கடையை அடைத்து விட்டு திரும்பும் போது தந்தையின் வீட்டை பார்த்து செல்வது வழக்கம். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று காலை கடையை திறக்க வந்த போது வீட்டை பார்த்தபோது வீட்டின் வெளிக்கதவு மற்றும் பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நசீர் அகமது வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 7 ½ பவுன் நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து சென்னையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story