காரில் ரூ.3 லட்சம் திருட்டு


காரில் ரூ.3 லட்சம் திருட்டு
x

காரில் ரூ.3 லட்சம் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் தெற்கு முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது48). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனது காரில் நண்பர் கணேசன் என்பவருக்கு பத்திர பதிவு செய்வதற்காக வீட்டில் இருந்த ரூ.5 லட்சத்தை எடுத்து கொண்டு சென்று அதில் ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார். மீதம் உள்ள ரூ.3 லட்சத்தினை காரின் பின்புறத்தில் வைத்துவிட்டு பழனியப்பன் ராமநாத புரம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள ஓட்டல் ஒன்றில் நண்பருடன் சாப்பிட சென்றுள்ளார். சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்த போது காரின் பின்பக்க கதவின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு பழனியப்பன் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே பார்த்தபோது அவர் வைத்து சென்ற பணத்தை யாரோ திருடிச் சென்றது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து காரில் இருந்த பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story