பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில் ஆழ்துளை கிணறுகளில் மின்வயர்கள் திருட்டு
நாமக்கல்
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியில் சுமார் 15 இடத்திற்கு மேல் ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான குழாயில் உள்ள மின்வயர்களை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றுள்ளனர். இதனால் சீராக குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் சுமார் 8 ஆழ்துளை கிணறுகளில் உள்ள வயர்களை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றனர். இதுகுறித்து எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story