பேரம்பாக்கம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டு


பேரம்பாக்கம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டு
x

பேரம்பாக்கம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

வீட்டின் பூட்டு உடைப்பு

பேரம்பாக்கம் அருகே உள்ள பண்ணூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் (வயது 52). இவர் காஞ்சீபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவரின் மனைவி ஜெயப்பிரியா வேலூரில் உள்ள தன் தாயார் வீட்டிற்கு கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றார். அருள் தனது வீட்டை பூட்டி விட்டு சந்தவேலூர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கினார். இந்த நிலையில் நேற்று காலையில் அருள் தன் வீட்டுக்கு வந்து பார்த்தார்.

நகை திருட்டு

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த வளையல், மோதிரம், செயின், கம்மல் என 16 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரிய வந்தது. திருட்டு சம்பவம் குறித்து அவர் மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

அதேபோல அருள் வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த துணிமணிகளை அள்ளிச் சென்றதும் தெரியவந்தது. இந்த சம்பவம் பண்ணூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story