பட்டப்பகலில் அடுத்தடுத்த வீடுகளில் 29½ பவுன் நகை திருட்டு


பட்டப்பகலில் அடுத்தடுத்த வீடுகளில் 29½ பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 1 July 2023 12:15 AM IST (Updated: 1 July 2023 4:07 PM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே பட்டப்பகலில் அடுத்தடுத்த வீடுகளில் 29½ பவுன் நகை திருடுபோனது

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள அ.திருவுடையார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 55). இவருடைய மனைவி ராணி(45). இவர் சம்பவத்தன்று காலை 7 மணி அளவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் மூலம் 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். இளங்கோ ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக 11 மணி அளவில் வயலுக்கு ஓட்டி சென்றார். பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தன. உள்ளே சென்று பார்த்த போது பீரோ கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 27 பவுன் தங்க நகைகள், ரூ.55 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது.

மேலும் அருகில் வசிக்கும் புகழேந்தி மனைவி பிரியா என்பவருக்கு சொந்தமான 2½ பவுன் தங்க நகையும் திருடப்பட்டு இருந்தது. பட்டப்பகலில் வீட்டில் ஆட்கள் இல்லாததை பார்த்து நோட்டமிட்ட ஆசாமிகள் நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து இளையான்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story