வியாபாரியின் மோட்டார் சைக்கிள் திருட்டு
சேலத்தில் வியாபாரியின் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுதொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
சேலம்
சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணர்கோவில் சந்த் பகுதியை சேர்ந்த ஜவுளி வியாபாரி லட்சுமி நாராயணன். இவர், வீட்டு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே லட்சுமி நாராயணன் மோட்டார் சைக்கிள் திருட்டு போன வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதாவது, லட்சுமி நாராயணன் வீடு அருகே நள்ளிரவு நேரத்தில் 3 பேர் வருகின்றனர். அவர்களில் 2 பேர், மோட்டார் சைக்கிளின் சைடு லைக்கை உடைத்து அதனை திருடி செல்கின்றனர். இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவரி உள்ளது. அந்த காட்சிதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காட்சிகளை கொண்டு போலீசார் கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story