தேங்காய்நார் தொழிற்சாலையில் பொருட்கள் திருட்டு


தேங்காய்நார் தொழிற்சாலையில் பொருட்கள் திருட்டு
x

ஆலங்குடி அருகே தேங்காய்நார் தொழிற்சாலையில் பொருட்களை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

தொழிற்சாலையில் திருட்டு

ஆலங்குடி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவர் மீனாட்சிபுரம் அருகில் தேங்காய் நார் தொழிற்சாலை வைத்துள்ளார். இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தினமும் வேலை பார்த்து வருகின்றனர். மேலும் இங்கு மோட்டார் பொருட்கள் வைப்பதற்கு ஒரு அறை அமைக்கப்பட்டிருந்தது. அதில் மோட்டார் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை தொழிலாளர்கள் வேலை முடிந்தவுடன் வைத்து செல்வார்கள்.

சம்பவத்தன்று தேங்காய் நார்களுக்கு தண்ணீர் தெளிப்பதற்காக வீரமணி தொழிற்சாலைக்கு வந்தார். அப்போது மோட்டார் பொருட்கள் வைத்திருக்கும் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் அங்கு சென்று பார்த்த போது, அங்கு இருந்த கட்டிங் மிஷின், கேபிள் ஒயர், இரும்பு பொருட்கள் என ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் நிலையத்துக்கு வீரமணி தகவல் கொடுத்தார். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தொழிற்சாலையில் உள்ள மோட்டார் அறையின் கதவை உடைத்து பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story