புழல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு


புழல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
x

புழல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

சென்னை

சென்னையை அடுத்த புழல் புத்தகரம் தங்கவேல் நகரை சேர்ந்தவர் சரவணன்(வயது 35). இவர், சொந்தமாக கேட்டரிங் நடத்தி வருகிறார். இவர், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான மாயவரத்துக்கு சென்றிருந்தார்.

நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்து இருந்த 5 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி புழல் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story