கடம்பத்தூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ.75 ஆயிரம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


கடம்பத்தூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ.75 ஆயிரம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x

கடம்பத்தூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ.75 ஆயிரம் திருடிய சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் விடையூர் காரணி பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 25). இவர் கடம்பத்தூர் ராஜாஜி சாலையில் பணம் பரிமாற்றம் செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை அவர் வழக்கம் போல கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லா உடைக்கப்பட்டு அதிலிருந்த ரொக்கப் பணம் ரூ.75 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து வசந்தகுமார் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story