"வீட்டுவசதித்துறையில் 35% காலிப்பணியிடங்கள் உள்ளன" - அமைச்சர் முத்துசாமி தகவல்


வீட்டுவசதித்துறையில் 35% காலிப்பணியிடங்கள் உள்ளன - அமைச்சர் முத்துசாமி தகவல்
x

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி ஆற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி ஆற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, பாசன பகுதிகளில் விவசாயிகளுக்கு தேவையான அளவு உரம் மற்றும் விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டு வீட்டு வசதித்துறையில் 35 சதவீதம் காலிப்பணியிடங்கள் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

1 More update

Next Story