'இனி இரட்டை தலைமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை' - பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி


இனி இரட்டை தலைமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை - பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி
x

இனிமேல் இரட்டை தலைமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று ஈ.பி.எஸ் ஆதரவாளர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

சென்னை,

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதால் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஈ.பி.எஸ் ஆதரவாளர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இனி மேல் இரட்டை தலைமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இது அதிமுகவினர் மட்டும் எதிர்பார்த்த தீர்ப்பு அல்ல, நாட்டு மக்களும் எதிர்பார்த்த தீர்ப்பு தான். ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தாலும் அதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யும்.

எத்தனையோ சோதனைகளை சந்தித்து அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை தீர்ப்பின் மூலம் காட்டியுள்ளார்கள். அதிமுக கொடி, 1.5 கோடி தொண்டர்கள் இனி எடப்பாடி பழனிசாமிக்கு தான் சொந்தம். இனி யாரும் கூக்குரல் இட முடியாது.

புதிய தெம்போடு திமுகவை விரைவில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு,அதிமுக ஆட்சியை அமைக்க மக்கள் தயாராவார்கள். மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு அரணாக இருப்பார். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story