"கால் வைக்ககூட இடம் இல்லை".. தனியார் பேருந்துகளில் அலைமோதும் கூட்டம்


கால் வைக்ககூட இடம் இல்லை.. தனியார் பேருந்துகளில் அலைமோதும் கூட்டம்
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் முண்டியடித்து காணப்பட்டது.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் முண்டியடித்து காணப்பட்டது.

கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், பணியாளர்கள் பேருந்தில் நிற்க கூட இடமின்றி மிகவும் சிரமத்திற்கு இடையே பயணித்துள்ளனர்.

புதுக்கோட்டையில் 6 பணிமனைகளில் இருந்து 75 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் கூறினாலும் தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.



1 More update

Next Story