'டாஸ்மாக் கடைகளில் போலி மது விற்பனை இல்லை' - அமைச்சர் முத்துசாமி விளக்கம்


டாஸ்மாக் கடைகளில் போலி மது விற்பனை இல்லை - அமைச்சர் முத்துசாமி விளக்கம்
x
தினத்தந்தி 15 Dec 2023 5:47 PM GMT (Updated: 15 Dec 2023 6:45 PM GMT)

போலி மதுபான விற்பனை தொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறுதானிய உணவுத் திருவிழாவை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். அங்கு வேளாண்மை, சித்த மருத்துவம், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் சார்பில் 16 அரங்குகள் அமைத்து கம்பு, சோளம், தினை, குதிரைவாலி, கேழ்வரகு, ராகி உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த உணவு வகைகளை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;

"டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானங்கள் இருக்கவே இருக்காது என்பதை என்னால் உத்தரவாதமாக சொல்ல முடியும். மற்ற இடங்களில் போலி மதுபானங்கள் விற்கப்பட்டாலும், அது தொடர்பாக காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலி மதுபான விற்பனையால் டாஸ்மாக் மது விற்பனை பாதிக்கப்படாது."

இவ்வாறு அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.



Next Story