'அம்மா உணவகம் தொடங்கிய போது சரியான திட்டமிடல் நடைபெறவில்லை' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


அம்மா உணவகம் தொடங்கிய போது சரியான திட்டமிடல் நடைபெறவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் சரியான திட்டமிடல் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

முதல்-அமைச்சரின் 'காலை உணவுத் திட்டம்' தமிழ்நாடு முழுவதும் 31,008 அரசு பள்ளிகளில் இன்று விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி படித்த பள்ளியில் இன்று தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களோடு அமர்ந்து உணவு அருந்தினார்.

இதே போல் சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட சென்னை மாநகராட்சி துவக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்-அமைச்சரின் 'காலை உணவுத் திட்டம்' தொடங்கப்படுவதற்கு முன்பு சரியான திட்டமிடல் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.

அதே சமயம் அம்மா உணவகம் தொடங்கிய போது திட்டமிடல் நடைபெறவில்லை என்று அவர் கூறினார். மேலும் அம்மா உணவகத்திற்கான திட்ட மதிப்பீடுகள், அதற்கான துறை எதுவும் இல்லை என்று தெரிவித்த மா.சுப்பிரமணியன், முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் சரியான திட்டமிடல் உள்ளது என்று கூறினார்.



Next Story