சனாதனம் பற்றிய கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை - உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்


சனாதனம் பற்றிய கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை -  உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்
x

அமைச்சர் பதவி இன்று வரும், நாளை போகும், முதலில் மனிதனாக இருக்க வேண்டும்.

சென்னை,

சென்னையில் விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்த பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

'நீட் விலக்கு நம் இலக்கு' என்ற கையெழுத்து இயக்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 10 லட்சம் கையெழுத்து பெற்றுள்ளோம். அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சி தலைவர்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். நீட் விலக்கு விவகாரத்தில் இப்போதாவது அதிமுக உண்மையாக பங்கேற்க வேண்டும். அமைச்சர் பதவி இன்று வரும், நாளை போகும், முதலில் மனிதனாக இருக்க வேண்டும். மனிதனாக சனாதன எதிர்ப்பை பதிவு செய்வது அவசியமானது. சென்னை ஐகோர்ட்டு தெரிவித்த கருத்துகளை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றார்.

முன்னதாக நீட் விலக்கை வலியுறுத்தி, தொடங்கப்பட்டுள்ள கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று ஆதரவு அளித்தார் விசிக தலைவர் திருமாவளவன்.


Next Story