தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு என்ற மாய தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு என்ற மாய தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 17 Sep 2022 9:42 AM GMT (Updated: 17 Sep 2022 11:40 AM GMT)

தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இருப்பது போன்ற மாய தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடு என்று தொடர் செய்திகள் வெளியாகி வருகிறது. இது தவறான செய்தி என்று பலமுறை தெரிவித்திருந்தாலும் கூட மீண்டும் இதுபோன்ற செய்தி வருகிறது.

ஒரு வாரங்களில் 5 அல்லது 6 மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அப்படி ஆய்வு மேற்கொள்ளும்பொழுது மருத்துவமனையில் உள்ள மருந்து கிடங்கைதான் முதலில் ஆய்வு மேற்கொள்கிறோம். எந்த மருத்துவமனையிலும் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை.

இதுபோன்ற குற்றச்சாட்டை ஒன்று அல்லது இரண்டு பேர் தேவை இல்லாமல் தெரிவித்து வருகிறார்கள். நிர்வாக ரீதியாக ஒரு சிலர் பணியிடை மாற்றம் செய்து இருக்கிறோம். அப்படி பணியிடம் மாற்றம் செய்தவர்கள் அரசின் மீது உள்ள கோபத்தில் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story