"ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விருந்தோம்பல் குறித்து பேசிய திருவள்ளுவர்" - பிரதமர் மோடி பெருமிதம்


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விருந்தோம்பல் குறித்து பேசிய திருவள்ளுவர்  - பிரதமர் மோடி பெருமிதம்
x

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், ‘விருந்தோம்பல்’ குறித்த சிறப்பினை திருக்குறள் மூலம் பிரதமர் மோடி எடுத்துக் கூறினார்.

சென்னை,

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார்.

இதற்கு முன்பு பிரதமர் மோடி நிகழ்ச்சிகளில் பேசும் போது பலமுறை திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். அந்த வகையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிலும், பிரதமர் மோடி 'விருந்தோம்பல்' குறித்த சிறப்பினை திருக்குறள் மூலம் எடுத்துக் கூறினார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் விருந்தோம்பலின் சிறப்பு குறித்து பேசியிருப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

இந்த விழாவில் அவர் கூறிய திருக்குறள்;-

"இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு"

மேற்கண்ட திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி, அதன் விளக்கத்தையும் கூறினார். அதாவது, 'ஒருவர் தனது வாழ்வில் பொருட்களை சேர்த்து, இல்வாழ்வை மேற்கொள்வது எல்லாம் விருந்தினரைப் போற்றி அவர்களுக்கான உதவிகளை செய்வதற்காகவே' என்ற திருக்குறள் விளக்கத்தையும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.


Next Story