திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் 8-வது நாளாக கொழுந்துவிட்டு எரியும் மகாதீபம்...!


திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் 8-வது நாளாக கொழுந்துவிட்டு எரியும் மகாதீபம்...!
x

திருவண்ணாமலையில் மகா தீபம் தொடர்ந்து 8-வது நாளாக சுடர் விட்டு எரிகின்றன.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இக்கோவிலில் முக்கிய நிகழ்வான கார்த்திகை மகா தீபம் கடந்த 6-ந் தேதி கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் 11 நாட்கள் மலையின் உச்சியில் காட்சி அளிக்கும்.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் 2668 அடி உயரம் கொண்ட மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 8-வது நாளாக (இன்று) கொழுந்துவிட்டு எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது. இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.


Next Story