வெள்ளிக்குறிச்சி முருகன் கோவிலில் திருவிளக்கு பூஜை


வெள்ளிக்குறிச்சி முருகன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 11 Aug 2023 12:45 AM IST (Updated: 11 Aug 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளிக்குறிச்சி முருகன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

சிவகங்கை

மானாமதுரை

மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சியில் உள்ள முருகன் சமேத வள்ளி தெய்வானை கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இந்த ஆண்டு உலக நன்மைக்காக 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருப்பணி குழு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று இரவு கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் வெள்ளிக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜை முடிந்தவுடன் வெள்ளிக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்ததை தொடர்ந்து பக்தர்கள் மிகுந்த பரவசம் அடைந்தனர்.


Next Story