திருவிளக்கு பூஜை
திருவிளக்கு பூஜை நடந்தது.
ராமநாதபுரம்
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர், மு.தூரி செல்வநாயகபுரம் கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் 47-வது பூச்சொரிதல் விழாவையொட்டி 2008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். கடந்த 23-ந் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டி, நடன போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
மேலும், அழகுவேல் குத்தி ஊர்வலமாக பக்தர்கள் வலம் வருதல், பூக்குழி இறங்குதல், அக்னி சட்டி எடுத்தல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. வருகிற 2-ந் தேதி முளைப்பாரி ஊர்வலத்துடன் விழா நிறைவடைகிறது.
Related Tags :
Next Story