திருவிளக்கு பூஜை
தேவகோட்டை அருகே உள்ள திருமணவயல் உடையார்குடியிருப்பு கிராமத்தில் உள்ள மகா கணபதி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே உள்ள திருமணவயல் உடையார்குடியிருப்பு கிராமத்தில் உள்ள மகா கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விநாயகரை வழிபட்டனர்.
இந்த விழாவையொட்டி திருமணவயல், கோட்டூர், பரம்பக்குடி பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. மேலும் இப்பகுதியை சேர்ந்த சிறந்த மாணவர் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். நிகழ்ச்சியில் தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர்கள் லட்சுமிதேவி, மாலதி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை இலக்கியமேகம், சீனிவாசன், நாகராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.