காங்கிரஸ் கட்சிக்கு இது தான் கடைசி தேர்தல் - அண்ணாமலை பேட்டி
விரைவில் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அண்ணாமலை கூறினார்.
கோவை ,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
"விரைவில் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் வாக்குறுதி எதும் நிறைவேற்றாமல் இருக்கும் தி.மு.க, சிலிண்டர் விலை குறைப்பு குறித்து பேசக் கூடாது.
காங்கிரஸ் கட்சியின் கடைசி தேர்தல் இது. போதை பொருள் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக் திமுகவின் அயலக அணியில் இருந்தவர். இந்த விவகாரம் குறித்து திமுக எந்த கருத்தும் சொல்லாமல் இருப்பது ஏன்?:
சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு தேவையான உதவிகளை பா.ஜ.க. ஆட்சி கண்டிப்பாக செய்யும். கோவையில் நான் போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் விருப்பபட்டாலும், ஒ ரு மாநில தலைவராக தனக்கு பல்வேறு கடைமைகள் இருக்கிறது" என கூறினார்.