தூத்துக்குடி: மது போதையில் மின் இணைப்பை துண்டித்த மின் ஊழியரால் பரபரப்பு


தூத்துக்குடி: மது போதையில் மின் இணைப்பை துண்டித்த மின் ஊழியரால் பரபரப்பு
x

கோப்புப்படம் 

தூத்துக்குடி மாவட்டம் பழனியப்பபுரம் பகுதியில் மது போதையில் மின் இணைப்பை துண்டித்த மின் ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் பழனியப்பபுரம் பகுதியில் உள்ள துணை மின் நிலையம் மூலம் சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், அங்கு இரவு பணிக்கு சென்ற மின் ஊழியர் பாலசுந்தரம் மது போதையில் மின் இணைப்பை துண்டித்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால், பொதுமக்கள் நேரடியாக அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்த பாலசுந்தரம், போதையில் மின் இணைப்பை துண்டித்து விட்டு, எழுந்து நிற்க முடியாமல் இருந்துள்ளார்.


Next Story