விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் ஆடுகளம் செயலியை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்


விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் ஆடுகளம் செயலியை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்
x

விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் ஆடுகளம் செயலியை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் விளையாட்டு வீரர்கள், விளையாட்டு செய்திகளை தெரிந்துகொள்வதற்கும், விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்கும் இனி வரும்காலங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலியான (TNSPORT) ஆடுகளம் செயலியில் பதிவேற்றம் செய்து பயன்படுத்த வேண்டும். விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தனிநபர், குழு மற்றும் பயிற்றுனர்கள் பதிவுசெய்து பயன்பெறலாம்.

இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு விளையாட்டு வீரர்களின் இ-மெயில் முகவரி, தொலைபேசி எண், பிறந்த தேதி, ஆதார் எண் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும். இனி வருங்காலங்களில் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்பவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் இந்த செயலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே digi locker மூலம் வழங்கப்பட உள்ளது. எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி- கல்லூரி மாணவர்கள், விளையாட்டு சங்கங்கள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் உடனடியாக TNSPORT ஆடுகள செயிலியை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.


Next Story