மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்கள் விரைந்து இணைத்திட வேண்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி


மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்கள் விரைந்து இணைத்திட வேண்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி
x
தினத்தந்தி 30 Jan 2023 5:47 AM GMT (Updated: 30 Jan 2023 7:06 AM GMT)

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் நேற்று மாலை வரை 87.44% நிறைவடைந்துள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் மின் இணைப்புடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்சார எண்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் நேற்று மாலை வரை 87.44% நிறைவடைந்துள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், நேற்று மாலை வரை 2.34 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

இது மொத்தமுள்ள 2.67 கோடி வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி & விவசாய இணைப்புகளில் 87.44% ஆகும். இதுவரை இணைத்திடாதவர்கள் விரைந்து இணைத்திட வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.




Next Story