காதலை ஏற்க மறுத்த மாணவிக்கு கொலை மிரட்டல்


காதலை ஏற்க மறுத்த மாணவிக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

காதலை ஏற்க மறுத்த மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது மாணவி. இவர் காரைக்குடியில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவியை, கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அவரது உறவினரான வாலிபர் ஒருவர் காதலித்ததாக கூறப்படுகிறது. அவரது காதலை மாணவி ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர், மாணவியின் உறவினருக்கு ஆடியோ அனுப்பியதாகவும், அதில், என்னை ஏமாற்ற நினைத்தால் விடமாட்டேன். அவளது முகத்தில் ஆசிட் ஊற்றுவேன் என்று பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பள்ளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story