திருச்செந்தூரில் பக்தர்களை அச்சுறுத்தும்திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கோரிக்கை


திருச்செந்தூரில் பக்தர்களை அச்சுறுத்தும்திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கோரிக்கை
x
தினத்தந்தி 23 Oct 2023 12:15 AM IST (Updated: 23 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் பக்தர்களை அச்சுறுத்தும் திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு, இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் இறைவனை வேண்டி விட்டு வெளியே வரும் போது அவர்களை, திருநங்கைகள் வழிமறித்து பணம் கேட்பதுடன், தராவிட்டால் பக்தர்களை அச்சுறுத்தி சாபம் விடுகின்றனர். அதே போல் மடிப்பிச்சை கேட்டும் சிலர் பக்தர்களை தொந்தரவு செய்து வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்திட வேண்டும்.

அதேபோல் 21-ந் தேதி முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த போது, பக்தர் ஒருவர் அவரிடம் விபூதி தரம் குறைந்ததாக இருக்கிறது என புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் கோவில் நிர்வாகத்திடமும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளார். எனவே அறநிலையத்துறை இது குறித்து விசாரணை செய்து தரமான விபூதியை பக்தர்களுக்கு வழங்க வேண்டும்' என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story