வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

முக்கூடல் போலீஸ் நிலைய பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட அரியநாயகிபுரம் தேரடி தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் கருத்தபாண்டி என்ற கார்த்திக் (வயது 26) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று கார்த்திக்கை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதற்கான உத்தரவை சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினார்கள்.


Next Story