மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசமா? - அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்


மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசமா? - அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்
x

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசமா என்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் மின் இணைப்புடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்சார எண்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக கடந்த மாதம் முதல் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் இதில் நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. பண்டிகை நாட்கள் தவிர ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை மொத்தம் 1.40 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

இந்த நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க கால அவகாசமா என்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில்,

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது பற்றி 2 நாட்களில் அறிவிக்கப்படும். டிச.31-ம் தேதியுடன் அவகாசம் முடிவதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசித்து அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் செந்தில் தெரிவித்துள்ளார்.


Next Story