திண்டிவனம் புதிய பஸ் நிலைய பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு

திண்டிவனம் புதிய பஸ் நிலைய பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தாா்.
திண்டிவனம்,
திண்டிவனத்தில் 25 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ளது. இந்த நிலையில் பஸ்நிலையம் அமைய உள்ள இடத்தில் நடந்து வரும் பணிகளை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு நடந்து வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார்.
அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், பஸ் நிலையத்துக்கு எதிராக யாரோ நீதிமன்றத்தில் தடை வாங்கி உள்ளதாக சிலர் வதந்தியை பரப்பி வருகிறார்கள். ஆனால் இங்கு பஸ் நிலையம் எந்த தடையுமின்றி அமையும், என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.
அப்போது அவருடன், கலெக்டர் மோகன், சப்-கலெக்டர் அமித், நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன், நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன், மாநில மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் சேகர், நகர துணை செயலாளர் ஓவியர் கவுதமன், நகரமன்ற உறுப்பினர், ரம்யா ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






